தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; தூத்துக்குடியில் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி, சோதனைச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்! - thoothukudi

2024 Lok sabha Election: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி மற்றும் மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி சோதனைச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி சோதனைச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 4:10 PM IST

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம் எனப் பல்வேறு தரப்பு பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சியின் விளம்பரங்களை அரசின் சார்பில் மறைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பாலங்கள், சிறு சிறு தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "திடீரென நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன் பின்னர் இதற்கான பணிகளை மேற்கொள்வதற்குச் சிரமமாக இருக்கும் என்பதால் தற்போதே இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் போலீசார் மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் போலீசார் மாவட்டம் முழுவதும் இத்தகைய சோதனைச் சாவடி அமைத்து தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சங்கரன் குடியிருப்பு, இடைச்சி விலை, பெரியதாழை, செங்குளம், செய்துங்கநல்லூர், வல்லநாடு, தோட்டிலோவன்பட்டி உள்ளிட்ட 12 இடங்களில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து, ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான இரு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்த சோதனையானது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி முழு வீச்சில் தொடரும்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:"சாதியின் விதைகளை இங்கே விதைத்துக் குளிர்காய நினைப்பவர்கள் தான் பாஜக" - தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details