தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாலியாக தொடங்கிய மெட்ராஸ் மெட்ராஸ் கார் பேரணி! - Chennai Women Car Rally - CHENNAI WOMEN CAR RALLY

Chennai Women Car Rally: சென்னையில் நடைபெற்ற கார் பேரணியில் பல்வேறு வேடங்களை அணிந்த பெண்கள், குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்றனர்.

சென்னையில் நடைபெற்ற மகளிர் கார் பேரணி
சென்னையில் நடைபெற்ற மகளிர் கார் பேரணி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 3:37 PM IST

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் டச்சஸ் கிளப் சார்பில், பெண்கள் பங்கேற்கும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படும். இந்த பேரணியானது AA மோட்டார் ஸ்போர்ட் சொல்யூஷன்ஸ் மற்றும் FMSCI-இன் ஒப்புதலுடன் தொழில் ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மகளிர் கார் பேரணி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த ஆண்டு 'மெட்ராஸ் - மெட்ராஸ்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பேரணி இன்று நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டல் வளாகத்தில் 23வது கார் பேரணியை ஹோட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைதியா, செயல் இயக்குநர் எம்.சுதாகர், நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சுமார் 50 முதல் 65 கிமீ தொலைவு நடைபெற்ற இந்த பேரணி, சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்குச் சென்று, பின்னர் மீண்டும் சவேரா ஹோட்டலை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் 'மெட்ராஸ் - மெட்ராஸ்' என்ற தீம்க்கு ஏற்ப மடிசார் சாரி, வேஷ்டி சட்டை, லுங்கி மற்றும் ரெட்ரோ உடைகளை அணிந்தவாறு காரை ஓட்டினர்.

பிரமாண்டமாக நடைபெற்ற பேரணி:இந்த பேரணியில் 100 கார்கள் பங்கேற்றன. போட்டி விதிகளின் படி, ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம் பெறுவர். ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டி, மற்ற இருவரும் விநாடி-வினா போட்டிக்கான விடைகளை தேடினர். மேலும், பேரணியில் செல்லும் காரின் வேகம் 30 முதல் 40 கி.மீ தாண்டக்கூடாது. ஜிபிஎஸ் கேமரா செயலி மூலம் செல்லும் இடங்களின் புகைப்படத்தை அனுப்புவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இந்த விளையாட்டில் இடம்பெற்றிருந்தன.

சுமார் 2.5 மணி நேரம் நடைபெறும் இந்தப் பேரணியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஓர் அணியாக சேர்ந்து விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு போட்டிக்கான விதிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் பல குழுக்கள் குடும்பமாக பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு 6 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் காருக்கு தேசிய அளவிலான பேரணியில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"இந்துத்துவாவை மக்கள் மீது திணிக்கிறது" - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பத்திரிகையாளர் என்.ராம் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details