சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதில், வியாசர்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
தீமிதி திருவிழாவின் பாதுகாப்பிற்காக சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் தீக்குண்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குழியில் இறங்கினர். இதில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பானு (வயது 45) என்ற பெண் தீயில் இறங்கியவுடன் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்துள்ளார்.
இதையும் படிங்க:'திமுக பவள விழாவுக்கு மட்டும் எப்படி அனுமதி?' 'கோர்ட்டின் பொறுமையை சோதிக்காதீங்க' - ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் அரசுக்கு எச்சரிக்கை!