திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (30), இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார்.
தொடர்ந்து வேறு நபருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரையும் பிரிந்து தற்போது முருகன் என்ற நபருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் முருகனையும் பிரிந்து அயன் சிங்கம்பட்டி பகுதியில் முத்துலட்சுமி வாழ்ந்து வந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துலெட்சுமியின் தலையில் மர்ம நபர் கட்டையால் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:தட்டி கேட்டவரின் மூக்கை கடித்து துப்பிய நபர்.. பல்லும் பறிபோனது.. வேலூரில் பகீர் சம்பவம்!