தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி.. திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் கணவர் புகார்! - Husband death certificate

Death Certificate: திருவாரூர் மாவட்டத்தில் கணவர் உயிருடன் இருக்கும் போதே மனைவி இறப்புச் சான்றிதழ் பெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவர் புகார் மனு அளித்துள்ளார்.

Death Certificate
இறப்புச் சான்றிதழ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 8:05 PM IST

கணவர் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி

திருவாரூர்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கப்பூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்தவர், திருமால் (56). இவரது முதல் மனைவிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு அவரது முதல் மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்ட நிலையில், பேரளம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகளான முத்துலட்சுமியை, முறைப்படி அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமாலுக்கும், முத்துலெட்சுமிக்கும் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு, திருமாலின் மூத்த மகளின் திருமணத்தை இருவரும் இணைந்து செய்து வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேல மங்கனூர் கிராமத்தில் இருவரும் இணைந்து டீக்கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு வரை கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த முத்துலட்சுமி, தாய் வீட்டிற்குச் சென்று வருகிறேன் என்று கூறி, சென்றவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.

திருமால் பலமுறை அவரை அழைத்தும், அவரது தந்தை அனுப்ப மறுத்ததால், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது இளைய மகளுடன் கப்பூரில் திருமால் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கப்பூரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க திருமால் சென்றபோது, அவரது ரேஷன் கார்டு உக்கடை ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமால், அடுத்த நாளே குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறையில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். பின்னர், குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், திருமாலை தொடர்பு கொண்டு, தங்களது மனைவி கடந்த 2020ஆம் ஆண்டு முதல், மாதம் மாதம் விதவை உதவித்தொகை வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த திருமால், இது குறித்து குடவாசல் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஜன.10ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், பேரளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு முத்துலட்சுமி ஒத்துழைக்கவில்லை என்று கூறியதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் கூறியதாவது, "எனக்கு முதல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், எனது முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவதாக முத்துலெட்சுமியை திருமணம் செய்து கொண்டேன். திடீரென கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். தற்போது நான் இறந்து விட்டேன் என சான்றிதழ் வாங்கி, விதவை உதவித்தொகை பெற்று வருகிறாr.

இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் திருவாரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். நான் இறந்து விட்டேன் என சான்றிதழ் வாங்கினால், எனது இரு குழந்தைகளுக்கு வரக்கூடிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடும். ஆகையால், நான் இறந்து விட்டதாக வாங்கிய சான்றிதழை நீக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!

ABOUT THE AUTHOR

...view details