சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று (மார்ச் 2) மாலை வெளியிட்டுள்ளது. இதனை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். குறிப்பாக, இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்பொழுது பாஜக சார்பில் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய பட்டியல் என்பது, முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் எனவும், இந்த பட்டியலில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தாலும் கூட, தமிழகத்தைப் பொறுத்தவரையில், இன்னும் பாஜகவுடன் கூட்டணி முடிவாகாத நிலை உள்ளது.