தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் கடன் மோசடி.. கடனில் சிக்கிய நபர்.. தற்கொலை முயற்சியில் 6 வயது குழந்தை உயிரிழப்பு! - Online Loan Fraud

Tiruppur Suicide: திருப்பூரில் ஆன்லைனில் கடன் பெறுவதற்காக பிறரிடம் வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் இருந்த நபர், திடீரென குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police Station
காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 9:43 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி விஜி. இவர்களுக்கு வின்சிலின் என்ற 6 வயது குழந்தை உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் கடன் கொடுப்பதாக வந்த லிங்க்கை ராஜீவ் பதிவிறக்கம் செய்துள்ளார்.

உடனே அவரை தொடர்பு கொண்ட நபர்கள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆவணச் செலவு இருப்பதாகக் கூறி 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜு தனது நண்பர்களிடம் கடனாகப் பெற்று வழங்கி உள்ளார்.

ஆனால், சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கூறியபடி லோன் பெற்று தரவில்லை எனத் தெரிகிறது. பிறகு, அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பின்னர், கரடிவாவி பேருந்து நிலையம் அருகே குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது, ஆறு வயது சிறுமி வின்சிலின் வாந்தி எடுத்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 6 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பூட்டிய வீட்டில் தாய், குழந்தைகளின் சடலம்... உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.. தருமபுரியில் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details