சென்னை: தமிழ்நாடு அரசின் எல்காட் (Electronic Corporation of Tamilnadu) மேலாண் இயக்குநராக இருந்தவர் (Managing Director) அனீஷ் சேகர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான இவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுக்கு கடிதம் எழுதினார். இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சிவதாஸ் மீனா, பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அனீஷ் சேகரை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
38 வயதான அனீஷ் சேகர், 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மருத்துவரான அனீஷ் சேகர், ராஜினாமாவுக்கு பின், கேரளாவுக்குச் சென்று மருத்துவப் பணியினை மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.