தேனி:தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் பத்திரபதிவு செய்யும் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் பெறுவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலை சுமார் 2.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களை அதிகாரிகள் விசாரணை செய்து பின் வெளியே அனுப்பினர். இந்த சோதனையில் தேனி சார்பதிவாளர் மாரிஸ்வரியிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. பின்னர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 43,900 பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.