தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலி! - university VC Vacancy - UNIVERSITY VC VACANCY

Vice-Chancellor Post : சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர், கோவை பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக கோப்புப்படம்
அண்ணா பல்கலைக்கழக கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 9:47 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பொறுப்பை உயர்கல்வி செயலாளர் தலைமையில் அமைக்க ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்து இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்கள் பணியிடம் காலியாக உள்ளது.

துணைவேந்தர் தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி வருகிறார். ஆனால் தமிழக அரசு பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை நியமிக்க கூடாது என கூறி வருகிறது. இந்த மோதல் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறாமல் உள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் மாணவர்களுக்கு பட்டம் வழங்குவது போன்ற பணிகள் நடைபெறாமல் அவர்கள் உயர் கல்வியில் சேர்வதும், வேலைக்கு செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிவு! தனியார் கல்லூரிகளில் சேர வைக்க முயற்சியா? - TNEA Students data leaked

ABOUT THE AUTHOR

...view details