சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்குத, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை பேசுகையில்,"அரசியலமைப்பு, பன்முகத்தன்மை சீர்குலைப்பது தீரன் சின்னமலைக்கு செய்யும் துரோகம் என்றும், தீரன் சின்னமலை போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பா.ஜ.க அரசு துரோகம் இழைக்கிறது. தேர்தலில் பாசிச சக்திகளை விரட்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். பிரதமர் அமைச்சரவை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆளுமை மிக்க பிரதமர் தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் இது. தமிழக மக்கள் இந்த தேர்தல் நன்கு அறிந்து புரிந்து தெரிந்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலில் தேசிய கூட்டணிக்குப் பெற்று பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொடர் வாக்குறுதிகளை வாக்காளர்கள் ஏற்க தயாராக இல்லை" என தெரிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மூத்த தலைவர்களான ஜெயக்குமார், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில்,"தி.மு.க. அரசு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதி ஒன்றும் கூட நிறைவேற்றவில்லை. அதற்கு எதிர்மறையாக விலைவாசி உயர்வால் பொதுமக்கள் மிகவும் கோபத்தில் இருப்பதால் இந்த தேர்தலை தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை வீசுவதாகவும் தெரிவித்தார். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் முதலிடம் இரண்டாம் இடமோ அல்லது மூன்றாவது இடமோ வருகிறதோ இல்லையோ. ஆனால், இந்த தேர்தலில் அதிமுக நிச்சயமாகக் கோப்பை வெல்லும் என தெரிவித்தார்.