தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடகர் மனோவின் மனைவி புகார்.. 8 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு! - singer mano son issue - SINGER MANO SON ISSUE

பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில், அவரது மகன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாடகர் மனோவின் மனைவி, வளசரவாக்கம் போலீசார்
பாடகர் மனோவின் மனைவி, வளசரவாக்கம் போலீசார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 9:50 PM IST

சென்னை:பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக மனோவின் மகன்கள் சாஹிர், ரஃபீக் மற்றும் அவர்களது நண்பர்கள் தர்மா (23), விக்னேஷ் (28) ஆகிய நான்கு பேர் மீது 126(2), 296(b) 118(1) 351(3) bnd ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ், தர்மா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இடையும் படிங்க:பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சி!

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் மனோவின் மகன்களை ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பாடகர் மனோ மகன்கள் சாஹிர், ரபீக் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்கியது பதிவாகி இருந்தது.

மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில், சம்பவம் நடந்த அன்று தன்னையும், தனது மகன்களையும் ஆயுதங்களைக் கொண்டு சிலர் தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய 8 பேர் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details