மதுரை:வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அந்த வகையில் மதுரை ஆதினமும் கட்டபொம்பன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம் கூறியதாவது,"இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். வெள்ளையனை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரி கட்ட மறுத்த வீரனாவான் என புகழாராம் சூட்டினார்.
மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!
தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அந்த வீரர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை" என்றார்.
பின்னர், தமிழகத்தில் பருவம் தவறிய மழை பொழிய காரணம் என்னவென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆதினம், "பொதுமக்கள் இடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம், மேலும் கோயில் நிலங்களை குத்தகை எடுத்தவர்கள் முறையாக குத்தகை பணம் செலுத்துவதில்லை அதனை செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதில் அளிக்காமல் உடனே அந்த இடத்தை விட்டு மதுரை ஆதினம் நகர்ந்து சென்றார்.