தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட பைக் சரிந்து விபத்து.. காரைக்காலில் நடப்பது என்ன? - ROAD ACCIDENTS in Karaikal

Karaikal bike accidents: புதுச்சேரியில் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரிகள் கொண்டு செல்லப்படும் வழிகளில் நிலக்கரிகள் சாலைகளில் சிதறுவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

காரைக்கால்
காரைக்கால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 4:37 PM IST

அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட பைக் விபத்து

புதுச்சேரி: புதுச்சேரி வாஞ்சூர் பகுதியில் அதானிக்குச் சொந்தமான தனியார் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகள், இங்கிருந்து லாரி, ரயில் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வழியாக அரியலூர், பெரம்பலூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த லாரிகளில் நிலக்கரிகள் முழுமையாக மூடப்படாமல் கொண்டு செல்வதால், நிலக்கரி சாலையில் சிதறி விழுவதாகவும், இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில், காரைக்கால் அம்பாள் சமுத்திரம் பகுதியில் நிலக்கரி அதிகளவில் சாலையில் சிதறிக் கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று (ஏப்.26) ஒரே நாளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மைக்கேல் டோலனுடனான திருமணத்தை உறுதிப்படுத்திய இலியானா; கணவருக்கு புகழாரம்! - Actress Ileana

ABOUT THE AUTHOR

...view details