தமிழ்நாடு

tamil nadu

JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவி.. திருச்சி என்ஐடியில் வாய்ப்பு! - tribal student select NIT trichy

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:41 PM IST

Updated : Jul 9, 2024, 5:49 PM IST

Tribal student select NIT trichy: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியினர் மாணவி திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

திருச்சி NIT மற்றும் மாணவி ரோகினி
திருச்சி NIT மற்றும் மாணவி ரோகினி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: நடந்து முடிந்த ஜேஇஇ (JEE) 2024-வது தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகினி, சுகன்யா ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்தத் தேர்வில் ரோகினி 73.8 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவிகளுள் முதலிடம் என்ற பெருமையை பிடித்திருக்கிறார்.

திருச்சி NIT மற்றும் மாணவி ரோகினி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை கிராமம், தொலை தொடர்பு, இணையதள சேவை, மின்சார வசதி குறைந்த அளவில் இருக்கும் ஒரு மலைப் பகுதியாகும். இப்பகுதியைச் சேர்ந்தவர் மலைவாழ் மாணவி ரோஹிணி. இவர், பச்சமலை அடுத்த சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து, பொதுத்தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் 73.8 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், மாணவி ரோகினிக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (National Institute of Technology) வேதிப்பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து மாணவி ரோஹிணி கூறுகையில், “மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து, ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினேன். அதில் 73.8 சதவீதம் தேர்ச்சி பெற்று, தற்போது திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதிப் பொறியியல் (Chemical Engineering) படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், எனது படிப்பிற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளியில் படித்த போது, தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ள கெமிக்கல் ஆய்வகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர்களிடம் தேசிய தொழில்நுட்பk கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன். 12ஆம் வகுப்பு தேர்விலும், ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளிth தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மேல் படிப்புக்கு உதவி செய்யும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்.. மனைவி பொற்கொடிக்கு அளித்த வாக்குறுதி!

Last Updated : Jul 9, 2024, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details