தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ்.. தமிழகம் முழுவதும் விரைவுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்! - SS Sivasankar - SS SIVASANKAR

Transport Minister Sivasankar: தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதைப் போன்று தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசுப் பேருந்துகளில் யுபிஐ (UPI) முறையில் பேருந்து கட்டணம் வசூலிக்கும் முறை அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 4:15 PM IST

பெரம்பலூர்: கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது‌. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். பின்னர், மாணவ மாணவிகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய இலவசப் பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் வரை, பழைய பஸ் பாஸ் அல்லது சீருடையில் வரும் மாணவ, மாணவிகளை பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வரலாம்.

அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில், புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதைப் போன்று, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாக சென்னையில் 3 ஆயிரம் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் யுபிஐ (UPI) முறையில் பேருந்து கட்டணம் வசூலிக்கும் முறை சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஸ்கூல் திறந்தாச்சு.. மாணவர்களை வரவேற்று அசத்தும் ஆசிரியர்கள்! - TN School Reopen

ABOUT THE AUTHOR

...view details