சென்னை:சென்னை - திருச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் காவலர் குடியிருப்பு உள்ளது. அதில், கூடுவாஞ்சேரி காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலகம், போக்குவரத்து காவல் அலுவலகம், உதவி காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் காவலர்கள் தங்கி வருகின்றனர்.
இந்த காவலர் குடியிருப்பு அருகே பழைய பாழடைந்த குடியிருப்பு கட்டடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் சரவணன் (27) என்பவர், தனது பணியை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக, கூடுவாஞ்சேரி பழைய காவலர் குடியிருப்பு இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டை திறந்து சுத்தம் செய்துள்ளார்.
அந்த வீடு கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது, சிலாப்பில் சுத்தம் செய்யும் போது மேலே இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும், அதனால் காவலர் சரவணின் கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்தாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து, படுகாயம் அடைந்த போலீசார் சரவணன் கூச்சலிட்டதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த சரவணனை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க:கிணற்றுக்குள் ஆண் சடலம்! குடிகார மருமகனை ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டிய மாமியர், மனைவி கைது - திருப்பூரில் பயங்கரம்