ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றம்: கடுமையான சட்டத்திருத்தம் பேரவையில் நிறைவேற்றம்! - CRIME AGAINST WOMEN BILL

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் இன்று முடிந்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தண்டனைகளைக் கடுமையாக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் - கோப்புப் படம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தண்டனைகளைக் கடுமையாக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 12:43 PM IST

Updated : Jan 11, 2025, 1:20 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 6-வது நாள் கூட்டத்தொடரில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கடுமையான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 6 திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், ஒன்றிய சட்டங்களான பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரி சுரக்‌ஷா ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பேசிய முதலமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதாக்கள் முன்மொழிந்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் முன்மொழிந்த மசோதா இன்றைய கூட்டத்தில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. தொடரந்து, மசோதா மீதான தங்களின் கருத்துகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதில் பிற கட்சி உறுப்பினர்கள் பேசிய விவரங்கள் கீழ்வருமாறு காணலாம்.

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி:

இந்த சட்டம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான சட்டம் ஆகும். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். இந்த சட்டத்தை வரவேற்கிறேன்.சட்டத்திற்கு வரவேற்பு

நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில், அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை வரவேற்கிறேன். இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும், அவை விரைவாகக் கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றன.

ஜி.கே.மணி, பாட்டாளி மக்கள் கட்சி:

சில நிகழ்வுகளில் தவறாக குற்றம் சுமத்தப்படும். எனவே, அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரக்கூடாது. அதில் அரசும், காவல்துறையும் கவனமாக இருக்க வேண்டும்.

செல்வபெருந்தகை, காங்கிரஸ்:

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:

பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவில் கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க
  1. யார் அந்த சார்? திமுக எம்எல்ஏக்களின் பதாகைகளால் அதிர்ந்த சட்டப்பேரவை!
  2. சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலை., விவகாரம்: கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதம்!
  3. பெரியார் எழுதிய நூல்களை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள்? - துரை வைகோ பதில் என்ன?

முதலமைச்சர் தாக்கல் செய்து, சட்டப்பேரவையில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாக்கள் மீது உறுப்பினர்கள் பேசி முடிந்ததும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்ட முன் வடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இன்று பேரவைக் கூட்டத்தின் முடிவில் ஆளுநர் உரைக்கு பதில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 11, 2025, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.