நீலகிரி:மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு அளவுக்கு அதிகமான வாகனங்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க கடந்த மே 7 முதல் முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மே 7 முதல் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது. உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு என 3 நிறங்களில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நுழைவு வாயில்களான கல்லார், கூடலூர் சோதனை சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே, அனைத்து வாகனங்களும் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா காலத்தில் இ-பாஸ் வழங்கப்பட்டதை போல அல்லாமல், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் இ-பாஸ் நடைமுறைக்கு வரும் முன்பு இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட, தற்போது மிகவும் குறைவாக உள்ளது.
இதையும் படிங்க :நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு.. தூக்கத்திலேயே நடந்த துயரம்.. நடந்தது என்ன?
இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையால் உதகை விடுதி உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இ-பாஸ் போன்ற நடைமுறைகள் இல்லாத வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் சுற்றலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 49 வியாபாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று உதகையில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்பி இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்