சென்னை: தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி(TNPSC) மூலம் பல்வேறு துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4, குரூப்-8 உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வுப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இன்று(அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.
வரிசை எண் | தேர்வு வகை | அறிவிக்கை நாள் | தேர்வு நடைபெறும் நாள் |
1 | குரூப்-1(Group 1) | 01.04.2025 | 15.06.2025 |
2 | குரூப்-4(Group 4) | 25.04.2025 | 13.07.2025 |
3 | ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்(நேர்முகத் தேர்வு பணிகள்) | 07.05.2025 | 21.07.2025 |
4 | ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) | 21.05.2025 | 04.08.2025 |
5 | ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் | 13.06.2025 | 27.08.2025 |
6 | குரூப் - 2 மற்றும் குரூப்-2 ஏ | 15.07.2025 | 28.09.2025 |
7 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்-5 ஏ) | 07.10.2025 | 21.12.2025 |
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம் எனவும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையின் போது வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.