தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பேருந்தில் இனி விருப்பம் போல் பயணம்" - அமைச்சர் சிவசங்கர் கூறிய அசத்தலான 17 அறிவிப்புகள்! - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly Session: அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், அரசு பணிமனைகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புகைப்படம்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 8:51 AM IST

சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று (ஜூன்25) நடைபெற்றது. இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு பணிமனைகளை நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறையின் 17 புதிய அறிவிப்புகள்:

  1. பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க, கதவு இல்லாத அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்துதல் திட்டத்தின் கீழ், 3 ஆயிரத்து 886 பேருந்துகளுக்கு ரூ.15.54 கோடி ஒதுக்கீட்டில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.
  2. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அனைத்து நகரப் பேருந்துகளிலும் பக்கவாட்டு பாதுகாப்பு அரண் பொருத்துதல் திட்டத்தின் கீழ், 8 ஆயிரத்து 771 பேருந்துகளுக்கு ரூ.8.77 செலவில் பாதுகாப்பு அரண் பொருத்தப்படும்.
  3. தனி நபர் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில், சென்னை மாநகரில் உயர்தர பேருந்து (Premium Bus) சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
  4. உலக வங்கியின் நிதி உதவியுடன், சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த 500 மின்சார பேருந்துகளை சென்னையில் கூடுதலாக அறிமுகப்படுத்தப்படும்.
  5. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கணினிமயமாக்கப்பட்ட சிப்பம் மற்றும் சரக்கு அனுப்புதல் (Logistics) சேவை அறிமுகம் செய்யப்படும்.
  6. பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய, தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்.
  7. பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைகளை மேம்படுத்துதல்.
  8. ஒவ்வொரு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் (Travel As You Please Ticket) அனைத்து நகரப் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்.
  9. பணிமனைகளை அதிநவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள் மூலம் மேம்படுத்தி, தொழில்நுட்ப உற்பத்தித்திறனை அதிகரித்தல்.
  10. மதுரை, கோவை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் உள்ள அரசு தானியங்கிப் பணிமனைகளை நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்.
  11. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும், கோயம்புத்தூர் அரசு தானியங்கி பணிமனையில் "அரசு நடமாடும் பணிமனை" உருவாக்கப்படும்
  12. மதுரையில் இயங்கி வரும் ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி மையத்தில் கலந்து கொள்ளும் அரசுத் துறை ஓட்டுநர்களுக்கு, 3 நாட்கள் தங்கி பயிற்சியில் கலந்து கொள்ளுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
  13. வாகனத் தொகுப்பாளர் செயலி மூலம் பயணிக்கும் பயணிகளின் நலனுக்காக வாகன தொகுப்பாளர்களுக்கான (vechile aggregators) விதிகள் வகுக்கப்படும்.
  14. வாகன முன்பதிவு எண்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுதல்.
  15. புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் செயல்திட்டம் வெளியிடப்படும்.
  16. சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கும், மரணமடைபவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கென ஒரு புதிய செயலி உருவாக்கப்படும்.
  17. அதிகப்படியான ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மூலம் ஏற்படும் ஒலி மாசினைக் கண்டறிய அச்சுப்பொறி வசதியுடன் கூடிய 255 ஒலி அளவிடும் கருவிகள் வாங்குதல் ஆகிய அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

இதையும் படிங்க: சட்டத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details