தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மலர் விவசாயத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது ஏமாற்றம் அளிக்கிறது" - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

TN Agriculture Budget 2024: மலர் வணிக மேம்பாடு குறித்து போதுமான திட்டங்கள் தமிழக வேளான் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 10:45 PM IST

மதுரை:2024-2025ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.20) தமிழக சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து அவர்களின் வருமானம் உயர்வதற்காகத் தமிழக அரசின் சார்பில் தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் பட்ஜெட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி, அறுவடைக்குப் பின் வேளாண் விளைபொருட்களில் ஏற்படும் இழப்பைத் தடுக்கப் போதுமான கிடங்குகள் அமைத்தல். அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறும் வகையில் 2482 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 200 கோடி நிதி. வேளாண் கருவிகள் வழங்க ரூ. 170 கோடி மானியம், ரூ. 16000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு போன்ற அறிவிப்புகளால் வேளாண் பெருமக்கள் இத்தொழிலில் அச்சமன்றி ஈடுபட ஊக்குவிக்கும்.

ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற புதிய திட்டம், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைத் தொகுப்புகள் அமைக்க நிதி, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க ரூ. 50 லட்சம் நிதி, பாசனப் பரப்பை உயர்வடையச் செய்து 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு, நீர்ப் பாசனத்தை உறுதி செய்யும் வகையில் குளங்கள், கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவற்றை அவ்வப்போது தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களை இத்தொழிலில் நிரந்தரமாக ஈடுபடச் செய்யும்.

வேளாண் பட்ஜெட்டில் பட்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காய்கறி விவசாயம் போன்று பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் மலர் விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 5.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு.

மலர் விவசாயம் மூலம், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி வணிகம் நடைபெற்று, அந்நிய முதலீடு கிடைத்து வரும் நிலையில், மலர் விவசாயத்திற்கும், மலர் வணிக மேம்பாட்டிற்கும் பெரிய அளவில் மானிய அறிவிப்பும், ஊக்குவிப்புத் திட்டங்களும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆனால் இது குறித்து துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதங்களின் போது மலர் விவசாயிகள் மகிழ்ந்திடும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:TN Agri Budget 2024: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details