ETV Bharat / state

கடத்தல்காரர்களுக்கு இனி ஆப்புதான்.. சுங்கத்துறை ஸ்குவாடில் என்ட்ரி கொடுக்கும் 3 மோப்ப நாய்கள்!

அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்கள் கடத்தலை கண்டுபிடிக்க சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் மேலும், மூன்று நாய்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 41 minutes ago

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், ஆயுதங்கள், அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்களை கண்டுபிடிப்பதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கே 9 எனப்படும் மோப்ப நாய்கள் பிரிவு ஒன்று உள்ளது. அதில் தற்போது ஆர்லி, ஆரியோ, ஸ்னோ பாய், ராக் என்ற 4 மோப்ப நாய்கள் உள்ளன.

இவை வெடி மருந்துகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றைத் திறமையாக கண்டுபிடிக்கும் திறமை கொண்டவை. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கே 9 மோப்ப நாய் பிரிவுக்கு மேலும் 3 மோப்ப நாய்கள் வரவிருக்கின்றன. இதனால், சுங்கத்துறை மோப்ப நாய் கே 9 பிரிவில் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 4 இல் இருந்து 7 ஆக அதிகரிக்க உள்ளது.

36 வாரங்கள் சிறப்பு பயிற்சி: இதற்காக இந்திய சுங்கத்துறை தலைமையகம், 3 மோப்ப நாய் குட்டிகளைத் தேர்வு செய்து பயிற்சிக்காக பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள கஸ்டம்ஸ் கனெய்ன் சென்டர் (Customs Canine Center) என்ற பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, இந்த 3 மோப்ப நாய்களும் 36 வாரங்கள் சிறப்பு பயிற்சியை எடுத்துவிட்டு வருகின்ற 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் இணைகின்றன.

இதையும் படிங்க: மோப்பநாய்க்கு கிடைத்த கவுரவம்! சீசருக்கு பிரியா விடை கொடுத்த அதிகாரிகள்

இந்த 3 மோப்ப நாய்களும் விமான பயணிகளின் உடைமைகளை கண்காணித்து மோப்பம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அபூர்வ வகை வன உயிரினங்கள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவைகளை கண்டுபிடிப்பதில் அதிக நிபுணத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாய்லாந்திலிருந்து ரூ.2 கோடி மதிப்புடைய 3 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த இளம் பெண்ணை, ஸ்னோ பாய் என்ற மோப்ப நாய் சுங்கத்துறையினருக்கு கண்டுபிடித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 41 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.