சென்னை:2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை. இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனக் கூறி, கால்நடை மருத்துவ படிப்பில் தனக்கு இடம் வழங்க கோரி திருநங்கை நிவேதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, திருநங்கை நிவேதா நவ. 25 ம் தேதி கால்நடை பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்கவும், அவர் அளித்த விண்ணப்பத்தை பெற்று மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கும் படி தமிழ்நாடு கால்நடை விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க:மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!