சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் டிஜிபி ஆக சைலேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பொறுப்பை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.
கோவை மேற்கு மண்டலத்தின் புதிய ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வாய், காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ராதிகா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி நாஜ்மூல் ஹோடா நவீன காவல்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.