தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்! - TN PONGAL GIFT

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த அறிவிப்பில் ரொக்கப் பணம் ஏன் இடம்பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இன்று பதிலளித்தார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு -கோப்புப்படம்
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு -கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

சென்னை:பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த அறிவிப்பில் ரொக்கப் பணம் ஏன் இடம்பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்வி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் நடைபெற்றது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல், பெருமழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு நாம் ஒன்றிய அரசிடம் 37,000 கோடி ரூபாய் நிதி வேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் ஒன்றிய அரசு வரும் 276 கோடி ரூபாய் தான் வழங்கியுள்ளது. அதேபோல் சர்வ சிக்ஷா அபியான் நிதி 2,155 கோடி ரூபாய், பள்ளி கல்வித் துறைக்கு இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிதித் தேவைகள் எல்லாம் மாநில அரசின் நிதியை கொண்டு ஈடுகட்டப்படுகின்றன. இப்படி நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு சிக்கி உள்ள காரணத்தினால் தான் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை. பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ₹280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது." என பதில் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details