ஆர்டிஐ மோடிக்காகவும், பாஜகவிற்காகவும் செயல்படுகிறாதா? வேலூர்:ஆர்டிஐ எப்படி இவர்களுக்கு மட்டும் விரைந்து தகவல் வழங்குகிறது. சாமானியன் கேட்டால் கிடைப்பது இல்லை என வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து, கொணவட்டம் பகுதியில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஏப்.01) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “சிஏஏக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இப்போது அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு விவகாரம், ஆர்டிஐ எப்படி இவர்களுக்கு மட்டும் விரைந்து தகவல் வழங்குகிறது. சாமானியன் கேட்டால் கிடைப்பது இல்லை, ஆர்டிஐ மோடிக்காகவும், பாஜகவுக்காகவும் செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைக்குக் கச்சத்தீவு விவகாரத்தைப் பேசி வருபவர்கள், சீனாவிடம் எல்லையைப் பறிகொடுத்துவிட்டார்கள். அருணாச்சல பிரதேசத்தில் சீனா, மொழியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. முதலில் மோடி இதற்குப் பதில் சொல்லட்டும். ஆனால் இதற்கு வாய்திறக்க மாட்டார், கச்சத்தீவு விவகாரத்தில் மட்டும் பொய் பிரச்சாரம் செய்கிறார்.
மேலும், 1.9 கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொடுத்து, கடல் பகுயை விரிவாக்கம் செய்து கடல் பரப்பை அதிகரித்து, கனிமவளத்தையும், கடல் வளத்தையும் இந்திரா காந்தி அதிகரித்துள்ளார். நாகாலாந்தை பிரிட்டீஸ் காலத்திலேயே இந்தியாவில் சேர்க்கமுடியலை, அதை இந்தியாவுடன் சேர்த்தார் நேரு? வங்கதேசத்தைப் பிரித்தது யார்? மோடி அப்போது சின்ன பையனாக இருந்திருப்பார், அவருக்குத் தெரியாது.
பாஜக தேசப்பற்று இல்லாதவர்கள், பாஜக ஆட்சியில் புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள், பாராளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை வீசப்பட்டது. மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டார்கள், இவற்றையெல்லாம் பிரதமர் மோடி வாய் திறந்து பேச மாட்டார், மோடி என்பது பொய் முகம். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடாமல், கட்டணத்தை உயர்த்தி டோல்கேட் மூலம் கொள்ளையடிக்கிறது மோடி அரசு”, என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: "கச்சத்தீவை கொடுத்துவிட்டு 45 வருடங்களுக்கு மேல், திமுக நாடகம் ஆடுகிறது" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - Annamalai Katchatheevu Issue