தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாஜக தேர்தல் அறிக்கை மக்களைப் பிரிக்கும் அறிக்கையாக உள்ளது” - சசிகாந்த் செந்தில் தாக்கு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Sasikanth Senthil: பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களைச் சார்ந்த திட்டங்கள் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் திட்டங்களாக உள்ளது என திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை பிரிக்கும் அறிக்கையாக உள்ளது
பாஜக தேர்தல் அறிக்கை மக்களை பிரிக்கும் அறிக்கையாக உள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 5:00 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பரப்புரையை பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மேற்கொண்டார். அப்போது பேசிய சசிகாந்த் செந்தில், "பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களைச் சார்ந்த திட்டங்கள் இல்லாமல், மக்களைப் பிரிக்கும் திட்டங்களாக உள்ளது.

மேலும், அரசியல் கலகத்தை மூட்டி அரசியல் செய்யும் கட்சியாக பாஜக உள்ளது. நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்றால் மோடியும், ஆர்எஸ்எஸ்-ம் இந்த நாட்டை விட்டு விலக வேண்டும். இல்லையென்றால், நமது தலைமுறையினர் குழந்தைகளுக்கு எதிர்காலம் இருக்காது.

வருகின்ற தேர்தலை அரசியல் தேர்தலாக பார்க்க வேண்டாம், நம் குடும்பங்களுக்காக நாம் செய்யும் கடமையாகப் பார்க்க வேண்டும். நம் குழந்தைகள் எந்தவித மேல் படிப்பையும் படிக்காத வகையில் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு உள்ளது. நீட் தேர்வு போன்ற தேர்வுகளை வைத்து, நம் குழந்தைகள் கல்வியில் மேலே செல்லாமல் பாஜக அரசு தடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருவதால், பாஜக ஏற்படுத்தும் பல பிரச்சினைகள் இங்கு வராமல் உள்ளது. மக்கள் விரோத பாஜக அராஜக ஆட்சியை ஒன்றியத்திலிருந்து விலக்கி, தமிழ்நாட்டில் எப்படி நல்லாட்சி கொடுத்தீர்களோ, அதேபோல் டெல்லியிலும் ஒரு நல்லாட்சி கொடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இந்த பிரச்சார பரப்புரையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே பாலவேடு கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு! - Lok Sabha Election Boycott

ABOUT THE AUTHOR

...view details