திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அந்தோணியம்மாள் இருந்து வருகிறார். இவர் நேற்று (நவம்பர்.20) அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷிடம் அளித்துள்ள மனுவில், சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரூராட்சி தலைவர்களை மக்கள் பணி செய்ய விடாமல் பெண் என்றும் பாராமல் சாதிய ரீதியாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில், “பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேரூராட்சியில் தான் பேரூராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிமுத்தாறு ஆலடியூர் நான்காவது வார்டு உறுப்பினர் செல்வியின் கணவர் மாரியப்பன் என்பவரும் கீழ ஏறுமாறுபுறம் ஏழாவது வார்டு உறுப்பினர் பிரேமாவின் கணவர் காசி என்பவரும் கீழ ஏர்மாள்புரம் ஐந்தாவது வார்டு உறுப்பினர் முப்புடாதி என்பவரின் மாமனார் பூதப்பாண்டியன் என்பவரும் பேரூராட்சி கூட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக பங்கேற்பதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
இதையும் படிங்க:இலவச இறுதிச் சடங்கு பொருட்கள்: சோகத்தில் இருக்கும் மக்களுக்கு பக்கபலமாக நிற்கும் தலைவி!