தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.660 கோடியில் திட்டம் ரெடி - ஆட்சியர் தகவல்! - திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன்

Tamiraparani River Project: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், கழிவு நீரை சுத்திகரித்து, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம் இன்னும் 24 மாதங்களில் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:18 PM IST

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.660 கோடியில் திட்டம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி பெருமழை பெய்து தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் நதிக்கரைப் பகுதிகள் சேதம் அடைந்தது. மேலும், ஆற்றுப் பகுதியில் கழிவுப் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், துணிகளும் நதிக்கரையை மாசுபடுத்தும் வகையில் குவிந்து கிடந்தது.

இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பொருட்களை சுத்தப்படுத்தும் பணி இன்று (மார்ச் 2) நடைபெற்றது. திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் நடந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதில் கல்லூரி மாணவிகள், வருவாய்த் துறையினர், தன்னார்வ அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, ஆற்றின் கரைப்பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுப் பொருட்கள், ஆற்றுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை அகற்றினர்.

ஜேசிபி உதவி மூலம் கரைகளும் புனரமைக்கப்பட்டன. இது குறித்து ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எல்லை கற்கள் கண்டறிந்து, எல்லை கற்களை நடும் பணிகள் நடைபெறும். கரைப் பகுதிகளில் வெள்ளத்தை தாங்கி நிற்கும் நீர் மருது மரங்கள் நடப்படும். சுமார் 10 ஆயிரம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆறு புனரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருந்து. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில். 660 கோடி ரூபாய் மதிப்பில் கழிவு நீரை சுத்திகரித்து, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம், இன்னும் 24 மாதங்களில் செயல்படுத்தப்படும். இது போன்று தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று, தாமிரபரணி நிரந்தர சீரமைப்பு விரிவான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்து கண்காணிப்பில் மூன்று இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டமானது விரிவுபடுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பத்திரப் பதிவுத்துறையில் பிப்ரவரியில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாய் - அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details