திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்(27). மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினாபேரியை சேர்ந்தவர்கள் மாலை ராஜா மற்றும் சண்முகவேல். இவர்கள் மூவரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்திவிட்டு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நெடுங்குளம் நோக்கி பயணித்துள்ளனர். அப்போது நாங்குநேரி அருகே உள்ள தாளைகுளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற பொழுது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.