தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி மரணம்: ஒரே நாளில் 20 ஆயிரம் காலி; உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்! - ONLINE RUMMY SUICIDE

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் நீண்ட நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று (நவ.23) அவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அருண்குமார், ஆன்லென் ரம்மி கோப்புப் படம்
உயிரிழந்த அருண்குமார், ஆன்லென் ரம்மி கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 1:56 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த விளையாட்டின் போது, அருண்குமார் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ள நிலையில் நேற்று 20 ஆயிரம் ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அருண்குமார் நேற்று இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இரவில் மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க:திருமாவளவன் அதிமுக நலன் சார்ந்து பேசுகிறாரா? கே.பி.முனுசாமி ட்விஸ்ட் பதில்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடையில்லை என்ற நிலையில் இருந்து வருகிறது.

தற்கொலையை கைவிடுக (ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையே ஆன்லைன் ரம்மியை ஆதரிக்கும் வகையில் பிரபல நட்சத்திரங்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் வருவதால், மக்கள் அந்த விளையாட்டை நம்பகதன்மை நிறைந்த விளையாட்டாக கருதி அதில் ஈடுப்பட்டு பின் இது போன்ற தற்கொலையில் முடிவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு இது போன்ற இணைதளம் மூலம் மக்கள் ரம்மி விளையாடுவதை கட்டுபடுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details