தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது - இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு! - Southwest Monsoon update

Southwest Monsoon: தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, புவி அறிவியல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு
தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 10:26 PM IST

சென்னை:2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று (ஏப்.15) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் 2024 தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் 106% ஆக இருக்கும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். 1971 - 2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ. இந்த முன்னறிவிப்பு, இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது. வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும். வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும்”, என எம்.ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹபத்ரா பேசுகையில், “கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் 2024 வரை) வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது, இது இந்தப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது. வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது. 2024 மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்”, என்று தெரிவித்தார்.

மேற்கண்ட கணிப்புகளின் தொடர்ச்சியாக, முறையே ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து வரும் ஒரு மாதத்திற்கான மாதாந்திர மழை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூடுதலாக, நாடு முழுவதற்குமான மழை அளவு முன்னறிவிப்புகளும், பருவத்தின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மழைப்பொழிவின் அளவும் ஆகஸ்ட் மாத முன்னறிவிப்புடன் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2024, மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்.

இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அச்சிடப்படவில்லை - ஆவின் நிர்வாகம் விளக்கம்! - Aavin Management About Greeting

ABOUT THE AUTHOR

...view details