தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டும் டும் டும்.. பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த தேனி இளைஞர்! - THENI MAN MARRIED FRENCH WOMAN

தேனியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுடன் தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் கலைராஜன், மரியன்
மணமக்கள் கலைராஜன், மரியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 7:28 PM IST

தேனி:தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த போஜன், காளியம்மாள் தம்பதியின் மகன் கலைராஜன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்த போஜன் உயிரிழந்த நிலையில், கலைராஜன் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கலைராஜனுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிரான்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் பெண் வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து, இன்று தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து மணமகன் கலைராஜன் கூறுகையில், “மேற்படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது மரியம்மை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம்.

மணமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய தேப்பனந்தல் மாட்டுச்சந்தை; ரூ.2 கோடிக்கு வர்த்தகம்; விவசாயிகள் உற்சாகம்!

முதலில் எங்கள் வீட்டில் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வது குறித்து சற்று யோசித்தனர். தமிழ் கலாச்சாரம் மரியம்மிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரின் வீட்டாரின் சம்மதத்துடன் மே மாதம் பிரான்சில் திருமணம் செய்து கொண்டோம். இப்போது தமிழர் முறைப்படி இங்கு திருமணம் செய்து கொண்டோம்” என தெரிவித்தார்.

மணப்பெண் மரியம் கூறுகையில், “கலைராஜனும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்தியாவிற்கு வந்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களின் குடும்பத்தில் நானும் ஒருவர் என்பது மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details