சென்னை(தாம்பரம்):ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிக கன மழையுடன் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவுறுத்தினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் மாநகரப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் புது பெருங்களத்தூர் அடுத்த இரும்புலியூர் காயத்ரி நகர் பகுதியில் குடியிருப்பில் இடுப்பளவிற்கு மழை நீர் சுழிந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள், ராட்சச மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதனை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் ,தாம்பரம் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.