தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படிப்படியாக குறைந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து..!

செம்பரம்பாக்கம் ஏரின் நீர்வரத்து இன்று காலை 1427 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 958 கன அடியாக குறைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 11:00 PM IST

சென்னை: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம், நத்தம் வழியாக ராமநாதபுரம், நத்தம் பக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரம் சென்றடைகின்றது.

இந்த நிலையில், 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, ஃபெஞ்சல் புயலினால் ஏற்ப்பட்ட மழையின் காரணமாக தற்பொழுது நீர் இருப்பு 20.61 அடியாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3675 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்பதால் தற்பொழுது 2.746 டிஎம்சி அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதத்கைய சூழலில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று (டிச.02) காலை 1479 கன அடியாக இருந்து வந்த நீர்வரத்து இன்று (டிச.02) காலைக்கு பிறகு 958 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 125 கனஅடி நீர் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக வெளியேற்றப்பட்டும் அளவாக இருந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வரும் சூழ்நிலையில், தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details