தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் எப்போது? - நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சொன்னது என்ன? - Former ADMK MLA Satya Case - FORMER ADMK MLA SATYA CASE

சென்னை தி.நகர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான சத்யா மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 3:45 PM IST

சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சென்னை தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென் சென்னை வட மேற்கு மாவட்ட செயலாளருமான சத்யா மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக 2.64 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் சத்யா உள்ளிட்டோர் மீது
பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே, சத்யா மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:"சீசிங் ராஜாவிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை" - காவல்துறை விளக்கம்!

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், நான்கு மாதத்திற்குள் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட உறுதியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details