தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு! - TANUVAS admission - TANUVAS ADMISSION

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளான கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேர்வதற்கு 2,392 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 10:38 PM IST

சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளான கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேர்வதற்கு 2 ,392 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை 28ந் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும் , தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன.

இதில் கடந்த ஆண்டைப்போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கால்நடை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 3 -ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 19 ஆம் தேதி வரையில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டபடிப்பிற்கு 11 ஆயிரத்து 586 மாணவர்களும் ,தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 2392 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் 28 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்று மாலை 5 மணி வரையில் adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2,327 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ அறிவிப்பு வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details