தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அந்த கடப்பாரையை குடுங்க சார்'.. சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றிய போக்குவரத்து காவலர்கள்..! - TRAFFIC POLICEMEN CLEANING ROAD

மதுரவாயல் அருகே சாலையில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் போல, களத்தில் இறங்கி அகற்றிய போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மழைநீரை அகற்றும் பணியில் காவலர்கள்
மழைநீரை அகற்றும் பணியில் காவலர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 2:03 PM IST

சென்னை:சென்னையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சென்னையின் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, அண்ணா சாலை, தி.நகர், சேத்துப்பட்டு, எழும்பூர், சேப்பாக்கம், ராயபுரம் ,வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், அண்ணாநகர் 9 செமீ, மணலி புதுநகர், அமைந்தகரை தலா 9 செமீ, கொளத்தூர், பெரம்பூர் தலா 6 செமீ, நுங்கம்பாக்கம் 5 செமீ, வடப்பழனி 3 செமீ மழை பதிவாகியது.

அதேபோல, மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வானகரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க:தமிழகத்தின் இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்? சென்னை வானிலை மையம் சொல்வது இதுதான்!

இதையடுத்து அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர்கள், தங்கள் கால் சட்டையை மடித்துக்கொண்டு, கையில் கடப்பாரை மற்றும் மண்வெட்டி உதவியோடு மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தனர். இதனால் மழைநீர் வேகமாக வடிந்து சாலையில் போக்குவரத்து சீரானது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்ற வரும் வரை காத்திருக்காமல் களத்தில் இறங்கி பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளத்தக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details