தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு: தீர்ப்பை செப். 18-க்கு ஒத்திவைத்த இலங்கை நீதிமன்றம்! - thoothukudi fishermen case update - THOOTHUKUDI FISHERMEN CASE UPDATE

thoothukudi fishermen in sri lankan jail: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி ரூபாய் ஏற்கனவே அபராதம் விதித்துள்ள நிலையில், எஞ்சிய 10 பேருக்கான தீர்ப்பை இலங்கை நீதிமன்றம் செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மீனவ படகுகள் (கோப்புப்படம்)
மீனவ படகுகள் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 3:51 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி ஒரு படகிலும் 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை விசாரணைக்கு என இலங்கை கடற்படையினர் அழைத்து பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 8ம் தேதி அன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி இவோனா விமலரத்ன 22 பேரையும் வரும் 20தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், 22 மீனவர்களின் வழக்கு கடந்த 20.08.2024 புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:267 கிலோ தங்கம் கடத்தல்; சென்னை ஏர்போர்ட் சம்பவத்தில் இரண்டு பேர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது..!

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இவோனா விமலரத்ன, மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ந் தேதி வரை நீதிமன்ற காவலில் நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) அபராதம் செலுத்துமாறும் செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டதோடு மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, வழக்கு மீதான உத்தரவை நீதிபதி செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details