தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது" - வானிலை ஆய்வு மையம் தகவல்! - FENGAL CYCLONE

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காசிமேட்டில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
காசிமேட்டில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 8:58 PM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இது சென்னைக்கு தெற்கு சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 50 மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்து, மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வேகம் எடுத்துள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால், மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கிறது என்றும், அதுமட்டும் அல்லாது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.29) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழையால் 33% மேல் பயிர் பாதிப்பு நேரிட்டிருந்தால் கணக்கீடு செய்ய நடவடிக்கை... வேளாண்துறை அமைச்சர் உறுதி!

தேர்வுகள் ஒத்திவைப்பு: இதற்கிடையில், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நாளை (நவ.29) நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அதேபோல, கனமழை முதல் அதி கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details