ETV Bharat / state

சட்டமன்ற சம்பவம்.. ஆளுநர் ரவியை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்! - TN ASSEMBLY TODAY

'தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை (ஜன.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் ஆர்.என்.ரலி
ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் ஆர்.என்.ரலி (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 4:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை (ஜன.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றியபோது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. ’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவைக்குறிப்பில் இடம்பெறும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவையில் இருந்து வெளியேறினார்.

2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி.

தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. தேசிய கீதத்தை சட்டமன்றம் அவமதித்துவிட்டதாக தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். கடந்த ஆண்டே மழுங்கி போன இந்த திட்டத்தை மீண்டும் எழுப்ப ஆளுநருக்கு யோசனை கொடுத்தவர்கள் எவ்வளவு பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள்! தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைதாரர் போல ஆளுநர் வேடம் கட்டுகிறார்.

தெலங்கானாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரை அழைக்கவே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயக மாண்பை கடைபிடிக்கும் வகையில் ஆளுநரை அழைக்கிறோம். அரசியல் சாசன சட்டப்படி ஆளுநருக்கு தரவேண்டிய மரியாதையை திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது. ஆனால், ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மாண்பையும் குலைக்கும் வகையில் நடந்து வருகிறார்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது இந்தூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் 2012 மார்ச் 4-ம் தேதி ஆளுநர் பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்தார். ‘‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் புஞ்சி கமிஷன் அறிக்கையின்படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது’’ என்றார் மோடி.

அந்த மோடிதான் பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக நியமித்தார். தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளி மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த போதுதான் பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோர்த்து இணைத்து வைத்தார்.

குஜராத் முதல்வர் மோடி இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, லோக் ஆயுக்தா விவகாரங்களில் ஆளுநர் கமலா பெனிவாலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கோபம் அடைந்த முதல்வர் மோடி மாநில உரிமையை நிலைநாட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார். ‘கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்’ என்று கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருந்தார். அந்த மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் இடையூறு செய்து வருகிறார்.

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் நாளை (ஜன.07) காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.