மதுரை:முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணி-சித்தார்த் பழனிசாமி ஆகியோருக்கு மதுரையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சராக அறிஞர் அண்ணா கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி முதல் 1969ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை பதவி வகித்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே, தன்னுடன் பிறந்த சகோதரியின் மகனான பரிமளத்தை தனது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். இந்த நிலையில், அண்ணாவின் வாரிசான பரிமளம்அண்ணாவுக்கு சரோஜா அண்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர்.பரிமளம்அண்ணா - சரோஜா பரிமளா தம்பதியினரின் மகள் வழிப்பேத்தி சுருத்திகா ராணியின் மகள் பிரித்திகா ராணி இந்திய தூதரகத்தில் (IFS) அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பி.சரவணபூபதி - சி.ரோசலின் தம்பதியரின் மகனும் ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியர் (IAS) அதிகாரியாக இருப்பவருமான சித்தார்த்பழனிசாமிக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது.