பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பாப்பாநாட்டில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதியாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட, பாப்பாநாடு காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து பாப்பாநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் என தங்களது கடையை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும், இப்பகுதியில் புழக்கத்தில் உள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்.. முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் கைது!