தஞ்சாவூர்:தஞ்சாவூரில் 60 வயதான கூலித் தொழிலாளி, கடந்த 2022ஆம் ஆண்டில் தனது சொந்த மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை அடுத்து, அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போதுதான், அந்த சிறுமியை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்த விவரம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் சுகந்தி, கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.