தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்" - டிட்டோஜாக் திட்டவட்ட அறிவிப்பு! - Tetojac

Tetojac : செப் 10ம் தேதியன்று 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என இன்று(செப் 8) நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பான கோப்புப்படம்
போராட்டம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 8:19 PM IST

சென்னை : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஈ.ராலேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்க்ஷித், ஆவின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், சி.சேகர், இல.தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ். சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

டிட்டோஜாக் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

தீம்பானம் 1 :தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள செப் 10ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் செப் 29, 30 மற்றும் அக் 1 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை
முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை இன்று பள்ளிக்கல்வித்துறைச் செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1387, கட செப் 7ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு, டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு செப் 10ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும், செப் 29, 30 மற்றும் அக் 1 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :"ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்" - அயலக தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு! - TN CM MK Stalin in USA today Speech

ABOUT THE AUTHOR

...view details