தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு! - Tamilnadu gutkha scam case

Tamilnadu gutkha scam case: குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை சென்னையில் உள்ள எம்.பி.., எம்.எல்.ஏ.க்கள் எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்  - கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 3:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து, குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டெல்லி சிபிஐ காவல்துறை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பின்னர் வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணையை சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்! - Chennai City police Commissioner

ABOUT THE AUTHOR

...view details