மதுரை:பட்டியல் சமூக அதிகாரிகள் பதவியிறக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பதவி உயர்வில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மதுரையில் பட்டியல் சமூக இடஒதுக்கீடு பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அறிவுச்சமூகம் என்ற அமைப்பின் தலைவருமான தமிழ் முதல்வன் கூறுகையில், “ஆயிரக்கணக்கான பட்டியல் சமூக அதிகாரிகளை அண்மையில் தமிழக அரசு பதவியிறக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், பட்டியல் சமூக அதிகாரிகளின் பதவி உயர்வு என்பது அவர்களின் உரிமை”.
'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: தாயை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற மகள்.. அலறிய மூதாட்டி.. பதறிய பொதுமக்கள்.. சென்னை அதிர்ச்சி!
“தமிழக அரசு தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான விரோதப் போக்கினைக் கடைப்பிடித்து வருகிறது. இடஒதுக்கீட்டின் வழியே பதவி உயர்வு தருவதில்லை. மேலும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும்கூட பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பட்டியல் சமூக அதிகாரிகள் பதவியிறக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதர மாநிலங்களைப் போன்றே பதவி உயர்வில் பட்டியல் சமூகங்களின் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் 16 (4) (ஏ) சட்டத்தைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அது அவர்களது உரிமையாகும். அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை என்றால் வருகிற தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்