குன்றத்தூரில் எலி மருந்து காற்றில் பரவி இரு குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான செய்தியை விரிவாக காணலாம். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Nov 18 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY MON NOV 18 2024
Published : Nov 18, 2024, 8:00 AM IST
|Updated : Nov 18, 2024, 11:12 PM IST
"தீபாவளிக்கு பார்த்த குழந்தைகள்.. இப்போ இல்ல" - குன்றத்தூர் பகுதி மக்கள் வேதனை!
விஜய்யின் முதல் குறி இதுதானா? - மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கூறுவது என்ன?
விஜய்யின் முதல் குறி திமுகவின் கூட்டணியை உடைப்பது தான். அதனால் தான் அவர் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கூறி விசிகவை குறி வைத்தார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். | Read More
கடைகளில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !
சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
லாட்டரி மார்ட்டின் வீடுகளில் ஈடி ரெய்டு ; ரூ.12.41 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்! - அமலாக்கத்துறை தகவல்!
லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதில் ரூ.12.41 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்திருப்பதாகவும், வங்கியில் உள்ள ரூ.6.42 கோடி பணத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | Read More
அசாமிருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?
திருச்செந்தூர் கோயில் யானை பாகன் உட்பட இருவரை மிதித்துக் கொன்றிருக்கும் நிலையில், கோயில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்த மறு ஆய்வுக்கான கோரிக்கை வலுக்கிறது. | Read More
தேனி அருகே லோடு வேன் மீது கார் மோதி விபத்து! ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் நிலை என்ன?
சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு ஆந்திரா திரும்பி கொண்டிருந்த பக்தர்களின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் படுகாயம் அடைந்தனர். | Read More
வேலூரில் போக்குவரத்து போலீசார் திடீர் ரெய்டு.. உரிய ஆவணம் இல்லாத 25 வாகனங்கள் பறிமுதல்!
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திடீரென வேலூர் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில், உரிய ஆவணங்களின்றி இருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். | Read More
கோவை கோல்டு வின்ஸ் டூ நீலம்பூர்.. மேம்பால கட்டுமான பணிகள் துவக்கம்!
கோல்டு வின்ஸ் முதல் நீலம்பூர் வரை 5 கி.மீ தொலைவிற்கு 600 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிலையில், அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளன. | Read More
இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பூர் தனியார் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டதில், அது வதந்தி என தெரிய வந்தது. | Read More
"அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே?" நடிகை கஸ்தூரிக்கு ஆதரவு குரல் கொடுக்கும் தமிழிசை!
எவ்வளவோ பிரச்னைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் அரசு, கஸ்தூரியை தீவிரவாதி போல பாரபட்சத்துடன் நடத்துகிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். | Read More
ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள்? இதுதான் கடைசி.. - டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. | Read More
"முதியோர் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம்" - நிதிக்குழு கூட்டத்தில் முதல்வர் கவலை!
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறிவிடும் அபாயத்தை சந்தித்து வருவதாக நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். | Read More
சிறுவனின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்.. ஏழு தையல் போட்டு சிகிச்சை.. சென்னையில் பரபரப்பு!
வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து சிறுவனும், பெண்ணும் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
46 ஆண்டுக்குப் பிறகு முடிவுக்கு வந்த வழக்கு.. தீர்ப்பு நாளில் நடந்த ட்விஸ்ட்!
புதுபாளையம் நந்தவனத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பான வழக்கு 46 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்றப்பட்ட பின் முடிவுக்கு வந்துள்ளது. | Read More
“வணிக வரி வாழ்வாதாரத்தை முடக்குகிறது” சேலம் நெசவாளர்கள் அரசுக்கு கண்ணீர் கோரிக்கை!
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வணிக வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி சேலத்தைச் சேர்ந்த அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
ஜாமீன் கையெழுத்திடாமல் தலைமறைவு? இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்க தலைவர் கைது!
இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர் கொலை வழக்கு தொடர்பான நிபந்தனை ஜாமினில் கையெழுத்திடாமல் தலைமறைவானதாக கூறி அவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். | Read More
விசிக தலைவர் எங்கே செல்வார்? அதிமுக வழக்கறிஞர் இன்பதுரைக்கு திருமாவளவன் பதில்!
தேர்தல் நேரங்களில் முரண்பாடான முடிவுகளை கூட எடுக்க நேரிடும். நாம் மக்களோடு நிற்போம், மக்கள் பிரச்சனைக்காக நிற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
பருவ மழை: காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் தரம் உயர்த்திட திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி..!
காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | Read More
எலி மருந்து கசிந்து மரணித்த குழந்தைகள்: வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு!
குன்றத்தூரில் எலி மருந்து காற்றில் பரவி இறந்த இரண்டு குழந்தைகளின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் சிறப்புக்குழு முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. | Read More
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். | Read More
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் இருவர் காயம்
திருச்செந்தூர் கோயில் யானையான தெய்வானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. | Read More
'அவருக்கு' எதிரா பேச மாட்டேன்.. 'விஜயின் அரசியல் வெற்றி'... - திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி..!
அரசியல் கட்சிகளை பிரம்மாண்டமாக மக்கள் கூட்டத்தோடு தொடங்கி தோற்றவர்களும் உண்டு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கூறினார். | Read More
ஆம்பூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..காரணம் என்ன? - ஆர்டிஓ விசாரணை!
ஆம்பூர் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த சில நாட்களில் குழந்தை உயிரிழந்தது ஏன்?-மருத்துவர்கள் சொல்லும் விளக்கம்!
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களாக தனது பேரன் நன்றாக இருந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறி குழந்தையின் தாத்தா மருத்துமனை வளாகத்தில் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
“பச்சிளம் குழந்தைகளை வளர்க்க முடியாவிட்டால் அரசிடம் கொடுங்கள்"-தஞ்சை ஆட்சியர் உருக்கமான வேண்டுகோள்!
பச்சிளம் குழந்தையை வளர்க்க இயலாத தாய்மார்கள் குழந்தைகளை எதும் செய்துவிடாமல் அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள் அரசு வளர்க்கும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கோரிக்கை வைத்துள்ளார். | Read More
"இந்தியை திணிக்கும் நோக்கத்துடன் 3 குற்றவியல் சட்டங்கள் அமல்"- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
இந்தியை மறைமுகமாக திணிப்பது மற்றும் மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்பதால், புதிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More
திமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காதது ஏன்?- எச்.ராஜா சொல்லும் விளக்கம்!
திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே கூட்டணி கட்சிகளை வைத்துக் கொள்கின்றன. ஆட்சியில் பங்கு தருவதில்லை என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். | Read More
2026 சட்டமன்ற தேர்தல்: தவெக விஜயுடன் கூட்டணி? - ஜெயக்குமார் கொடுத்த பதில்!
தவெக கட்சியுடன் கூட்டணியா என்பது தொடர்பாக அதிமுக தலைமை தான் முடிவு எடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். | Read More
அஸ்வத்தாமன் குண்டாஸை எதிர்த்து தாய் மனு; தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
அதிமுகவுடன் கூட்டணியா? தவெக அளித்த விளக்கம் !..
தவெகவை அதிமுக-வுடன் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் வெளியிட்ட செய்தி முற்றிலும் புறம்பானது என தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை மூலம் தவெக விளக்கமளித்துள்ளது. | Read More
டிச.21 இல் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு - பாமக அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் டிசம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More
ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!
ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். | Read More
"விரக்தி, ஏமாற்றம்.. விஷ ஜந்துகளுக்கு நாங்கள் விஷக்காளான்கள் தான்" - எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!
‘தன்னை புகழ யாருமே இல்லையே’ என்ற விரக்தியும், ‘தான் பாராட்ட அதிமுகவில் ஆளேதும் இல்லையே’ என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித் தலைவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?.. மாவட்ட தலைவர் கொடுத்த அப்டேட்!
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சிவா தெரிவித்துள்ளார். | Read More
"சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்துக" - அன்புமணி ராமதாஸ்
சேலம் விமான நிலையத்திற்கான விரிவாக்கப் பணிக்கு, நிலங்களைக் கையகப்படுத்த எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More