தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Oct 11 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY FRI OCT 11 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : Oct 11, 2024, 7:50 AM IST

Updated : Oct 11, 2024, 10:48 PM IST

10:44 PM, 11 Oct 2024 (IST)

தகாத உறவில் பிறந்த குழந்தை.. ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த கொடூரத் தாய்.. திருவாரூர் பகீர் சம்பவம்!

திருவாரூரில் பிறந்து 10 மாதங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட மூவர் மீது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - திருவாரூர்

10:02 PM, 11 Oct 2024 (IST)

திருப்பத்தூர் அருகே மாந்திரீக பூஜை! மண்ணில் புதைந்திருப்பது மனித உடலா? அதிகாரிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்து ஓடையில் மர்ம நபர்கள் மாந்திரீக பூஜை செய்யப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - WITCHCRAFT

09:41 PM, 11 Oct 2024 (IST)

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து!

கவரப்பேட்டை(kavaraipettai) ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மைசூருவில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து. | Read More

ETV Bharat Live Updates - KAVARAPETTAI

09:27 PM, 11 Oct 2024 (IST)

நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?

திருச்சி - சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தரையிறங்க முடியாமல் 2 மணிநேரமாக வானில் வட்டமடித்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - TIRUCHIRAPALLI AIRPORT

08:05 PM, 11 Oct 2024 (IST)

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்: 42 குண்டுகள் முழங்க நல்லடக்கம்.. திருவள்ளூர் ஆட்சியர் நேரில் மரியாதை!

காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஸ்டான்லி உடலுக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் அரசு மரியாதை செய்தார். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates - ராணுவ வீரர் ஸ்டான்லி

07:50 PM, 11 Oct 2024 (IST)

திருச்சி - சார்ஜா விமானத்தில் இயந்திர கோளாறு.. ஒரு மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானத்தால் பரபரப்பு!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் 1 மணிநேரமாக திருச்சி பகுதியில் வட்டமடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - AIR INDIA EXPRESS

05:45 PM, 11 Oct 2024 (IST)

குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்..விரத முறைகளும் வேடங்களின் பலன்களும்!

கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டினத்தில் 'குலசை தசரா' எவ்வாறு கொண்டாடப்படுகிறது, பக்தர்கள் வேடமணிவதற்கான நோக்கங்கள் என்ன ? இதற்கான விரத முறைகளும், வேடங்களின் பலன்களும் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் காண்போம். | Read More

ETV Bharat Live Updates - குலசை தசரா

05:05 PM, 11 Oct 2024 (IST)

சென்னையில் சாலை பள்ளங்களால் பறிபோன 3 உயிர்கள்! பருவமழை தொடங்கும் முன்னரே பரிதாபம்

சென்னையில் கடந்த 2 வாரத்தில் சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக மாநகராட்சி சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாகவும் விவரிக்கிறது இச்செய்தி. | Read More

ETV Bharat Live Updates - சென்னை மாநகராட்சி

05:06 PM, 11 Oct 2024 (IST)

துப்பாக்கி, அரிவாளுடன் கரூரில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் கைது!

கரூரில் கொலை திட்டத்துடன் சுற்றித்திரிந்த கூலிப்படையினரை அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடித்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - KARUR

04:49 PM, 11 Oct 2024 (IST)

மடிப்பாக்கம் சிலிண்டர் விபத்து: இளம்பெண் லின்சி உயிரிழந்த சோகம்

மடிப்பாக்கத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். | Read More

ETV Bharat Live Updates - MADIPAKKAM CRIME

04:50 PM, 11 Oct 2024 (IST)

"தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடு குலசை தசரா திருவிழா": சாமி வேடமணிந்தவர்களை ஃபோட்டோ எடுத்து மகிழ்ந்த அமெரிக்கர்!

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலின் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - குலசை முத்தராமன் கோயில்

04:31 PM, 11 Oct 2024 (IST)

"கோவை வந்தா வீட்டுக்கு வரேன்" தமிழ் வைத்தியருக்கு ரத்தன் டாடா கொடுத்த வாக்குறுதி!

இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்த ரத்தன் டாடாவின் முதுகுவலிக்கு சிகிச்சை அளித்ததாக கோவை வைத்தியர் இலக்குமணன், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - KOVAI PHYSICIAN ON RATAN TATA

04:31 PM, 11 Oct 2024 (IST)

மினி கூவமாக மாறி வரும் திருப்பத்தூர் பெரிய ஏரி.. நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?

திருப்பத்தூர் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இறந்த மாடு ஒன்றை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை என மக்கள் குமுறல் | Read More

ETV Bharat Live Updates - GARBAGE IN TIRUPATTUR LAKE

03:39 PM, 11 Oct 2024 (IST)

திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி கொலை.. இளைஞரும் விபரீத முடிவு.. சிவகங்கை ஷாக்!

சிவகங்கை அருகே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - மதகுபட்டி போலீசார்

02:31 PM, 11 Oct 2024 (IST)

டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - TNPSC ANNUAL PLANNER

02:13 PM, 11 Oct 2024 (IST)

'பண்டிகை நாள்ல தான் கொள்ளையடிப்போம்'.. பொண்டாட்டி பாலிசி... தாம்பரம் கொள்ளை சம்பவத்தில் ஷாக் கொடுத்த தம்பதி!

தாம்பரம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சொகுசு வாழ்க்கை வாழ கணவனை மனைவியே கொள்ளை அடிக்க அனுப்பி வந்தது அம்பலமாகியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - TAMBARAM ROBBERY

02:10 PM, 11 Oct 2024 (IST)

ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க.. தீபாவளியை முன்னிட்டு ஆவின் வெளியிட்ட இனிப்பான செய்தி!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சிறப்பு சலுகை விலைகளில் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - AAVIN SWEETS

01:21 PM, 11 Oct 2024 (IST)

ஐடி ஊழியர்களே டார்கெட்.. சென்னையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது!

சென்னை வளசரவாக்கத்தில் ஐடி ஊழியர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - GANJA SALE

01:19 PM, 11 Oct 2024 (IST)

விவாகரத்து மனு தள்ளுபடி ஆனாலும் இழப்பீடு - பொய்க்காரணம் சொன்ன கணவருக்கு உத்தரவு

பொய்யான காரணம் கோரி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம் இருந்து மனைவி இழப்பீடு கோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - DIVORCE CASE

01:02 PM, 11 Oct 2024 (IST)

'பர்னஸ் ஆயில் பிசினஸ்'..சதுரங்க வேட்டை பாணியில் 24 லட்சம் மோசடி.. குற்றவாளிக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு!

பர்னஸ் ஆயில் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி 24 லட்சம் பணம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - BUSINESS FRAUD

12:43 PM, 11 Oct 2024 (IST)

ஆயுத பூஜை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! மல்லிகை, கனகாம்பரம் எவ்வளவு?

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இருந்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். | Read More

ETV Bharat Live Updates - KOYAMBEDU FLOWER MARKET

10:51 AM, 11 Oct 2024 (IST)

சட்டமன்றத்தில் கூண்டேறிய முதல் பத்திரிகையாளர்! காலமானார் முரசொலி செல்வம்..

கருணாநிதி தொடங்கிய முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் (84) பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். | Read More

ETV Bharat Live Updates - MURASOLI SELVAM PASSED AWAY

10:44 AM, 11 Oct 2024 (IST)

குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தூத்துக்குடி எஸ்பி அதிரடி!

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறவுள்ள தசரா திருவிழா சூரசம்ஹாரம் நிகச்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - ஆல்பர்ட் ஜான்

10:22 AM, 11 Oct 2024 (IST)

நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி.. சென்னையில் சோகம்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - நீரில் மூழ்கி பலி

07:58 AM, 11 Oct 2024 (IST)

சைபர் கிரைம் மோசடியில் இத்தனை கோடி இழப்பா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 9 மாதத்தில் 91 ஆயிரத்து 161 புகார்கள் பெறப்பட்டு, ரூ.526 கோடி முடக்கப்பட்டுள்ளதாக மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - தமிழ்நாடு சைபர் கிரைம்

07:36 AM, 11 Oct 2024 (IST)

ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்புக்குத் தடை - மத்திய அரசு உத்தரவு!

சென்னையில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்ட நிலையில், ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற அமைப்பைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - ஹிஸ்ப் உத் தஹ்ரிர்

06:34 AM, 11 Oct 2024 (IST)

உலக பெண் குழந்தைகள் தினம்: பெற்றோர், ஆண் நண்பர்கள் செய்ய வேண்டியது என்ன?

சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் செல்வ கோமதி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Last Updated : Oct 11, 2024, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details